புத்தளத்தில் இளம் பிக்கு நீரில் மூழ்கி உயிரிழப்பு...!

சாஹிப்

தப்போவ நீர்த்தேக்கத்தில்  மூழ்கி இளம் பிக்கு ஒருவர் இன்று (18) உயிரிழந்துள்ளார்.

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஓய சங்கானந்த தேரர் என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளம் பிக்கு புத்தளம் , வனாத்தவில்லு வன்னாத்தவில்லு ஸ்ரீ தர்மராஜ விகாரைக்கு வருகை தந்துள்ளதுடன், அங்கிருந்து பிக்குகள் குழுவுடன் தப்போவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்த இளம் பிக்குவின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனை நாளை (19) நடைபெறவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post