மதுரங்குளியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...!

ரிபாக்

புத்தளம் - மதுரங்குளி பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து  குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி, ரந்தியாகம பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சாமர பிய கெலும் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளி - முருகன் கோயிலுக்கு பின் பக்கமாக உள்ள சிறிய குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த முந்தல் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்தில் மரண விசாரணையை மேற்கொண்டார்.

அத்துடன் , குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், நேற்று (29) மாலை பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது.

இதன்போது உயிரிழந்த நபரின் உடல் அவயங்கள் இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post