புத்தளத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்...!

சாஹிப்

புத்தளத்தில் டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை புத்தளம் நகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றன.

இதன் அடிப்படையில், புத்தளத்தில் டெங்கு  பரவக்கூடிய சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் புத்தளம் நகர சபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வெட்டாளை அசன்குத்தூஸ் வித்தியாலயம் மற்றும் புத்தளம் தாருஸ்ஸலாம் மஸ்ஜித், சாலிஹீன் மஸ்ஜித் ஆகிய இடங்களில் புத்தளம் நகரசபை சுகாதார பிரிவு அதிகாரிகளால் டெங்கு விழிப்புணர்வு செயலமர்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், டெங்கு அவதான நிலைமையைக் கருத்திற்கொண்டு புத்தளம் நகரசபை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் பொலிசார் இணைந்து இன்று (29)  மணல்குன்று, கடையாகுளம் பகுதிகளில் பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  

இதன்போது அதிகாரிகளால் நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளங் காணப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உரியவர்களுக்கு  அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

நகரசபை செயலாளர்  எல்ரபி.ஜி. பிரீத்திகாவின் வழிகாட்டலுடன் நகரசபையின் சுகாதார மேம்பாட்டு பிரிவு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு மற்றும்  விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

Previous Post Next Post