புத்தளம் - கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை சம்பந்தமான செயலமர்வும், மேலங்கி அன்பளிப்பும் இன்று (13) பாடசாலையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீகின் வேண்டுகோளுக்கிணங்க, மதுரங்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.கே.ஜீ. விக்ரமரத்னவின் வழிகாட்டலின் கீழ் மதுரங்குளி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.சந்திரதிலக்க மற்றும் எம்.ஏ.எம்.அம்ஜத் ஆகியோர் பாடசாலைக்கு சமூகமளித்து மாணவர்களுக்கு வீதி போக்குவரத்து ஒழுங்கு முறை சட்டதிட்டங்கள் சம்பந்தமாக பயிற்சியளித்தனர்.
இதேவேளை, பாடசாலை ஆரம்பம் மற்றும் மூடப்படும் போது வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள மாணவர்கள் பயன்படுத்துவதற்கு தேவையான மேலங்கியும், சமிச்சை பலகையும் (Sign Board) போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




