ரெட்பானா – கஜுவத்தை உள்வீதி புனரமைப்பு!


ரஸீன் ரஸ்மின்

தொடர்ச்சியாக பெய்த கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மதுரங்குளி, புழுதிவயல் கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட ரெட்பானா – கஜுவத்தை உள்வீதி (நதீர் மௌலவியின் வீட்டுக்கு அருகில் உள்ள வீதி)  புனரமைக்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி பிரதேச சபை குறித்த வீதியை புனரமைப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறித்த வீதி கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதுடன்,  பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், வாகன சாரதிகள் இவ்வீதியூடாக போக்குவரத்து செய்வதில் பல சிரமங்களை எதிர் நோக்கி வந்தனர்.

இந்த நிலையில், குறித்த வீதியை அவசரமாக புனரமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் (பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டாரம்) எம்.என்.எம். ரினோஸ், பிரதேச சபை தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸிடம் முன்வைத்த அவசர கோரிக்கையின் அடிப்படையில்இந்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை புனரமைப்பதற்கு முயற்சி செய்த கற்பிட்டி பிரதேச பொதுஜன ஐக்கிய முன்னணியின் விருதோடை வட்டார உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் மற்றும் இதற்காக நிதியுதவி வழங்கிய கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிகாஸ் உட்பட இதற்காக முயற்சித்த அனைவருக்கும் ஊர் மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



Post a Comment

Previous Post Next Post