அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தவர் கைது...!

அல்லாஹ்வை அவமதிக்கும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து அதனை முகநூல் ஊடாக பகிர்ந்த நபர் ஒருவர் கட்டுகஸ்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர் பயன்படுத்திய ஸ்மார்ட் கைத்தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஒருவர் தமது மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து அதனை பேஸ்புக் ஊடாக பகிரங்கப்படுத்தியதாக உலமாக்கள் சிலர், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் சில்லறை வியாபாரம் செய்யும் 40 வயதுடையவர் ஆவார். 

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post