எங்கள் தேசம் பத்திரிகை மற்றும் அல்ஹஸனாத் சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர்.அப்துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்லாஹி) சற்றுமுன்னர் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இன்று நண்பகல் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த அன்னாரது ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மர்ஹூம் ஆர்.அப்துல்லாஹ் அஸ்ஸாம் (இஸ்லாஹி) இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மூத்த உறுப்பினராவார்.
(ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.)
