புத்தளம் மாநகர சபை ஐ.தே.க வேட்பாளர் ஹெரோயினுடன் கைது


ரிபாக்

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் புத்தளம் மாநகர சபைக்கு 3ம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மூன்று கிராம் 260 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், போல்ஸ் வீதியில் வசிக்கும் 54 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வேட்பாளரின் கையில் ஹெராயின் போதைப் பொருள் இருந்ததாகவும், அதனை வாங்குபவர் வரும் வரை சந்தேக நபர்  காத்து இருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post