புத்தளம் தள வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு

சாஹிப்

புத்தளம் தள  வைத்தியாசாலையின் வெளி நோயாளர் பிரிவிக்கு  ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம் பெறுமதியான அத்தியவாசிய மருந்துகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கத்தின் (Puttalam hospital Development Forum ) செயலாளரும் , சமூக ஆர்வலருமான எச்.எம்.எம்.  சபீக் விடுத்த  வேண்டுகோளுக்கிணங்க  அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் புத்தளம்   மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டில் YWMA - SRI LANKA அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது.

Paracetamol syrup, Itraconazole and Amoxycilin  உள்ளிட்ட மருந்து பொருட்கள் வைத்தியசாலையின் பிரதம மருந்தாளர் பாத்திமா மாஜிதாவிடம் ஒப்படைக்கப்பட்டன.




Post a Comment

Previous Post Next Post