- ரஸீன் ரஸ்மின் -
புத்தளம் தெற்கு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பெருக்குவற்றான் அல்மின்ஹாஜ் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் அணிவிக்கும் நிகழ்வு இன்று (26) காலை இடம்பெற்றது.
"இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்" எனும் மணி மகுடத்தின் கீழ், பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.றாசிக் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உடப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அத்துடன், பெருக்குவட்டான் கிராம உத்தியோகத்தர் பிரியந்தி, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கீர்த்தி லதா, பெருக்குவட்டான் ஜும்ஆ மஸ்ஜிதின் செயலாளர் ஏ.எம். நாசிக், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் ஆசிரியர் எஸ்.எல்.எம். ஜெனீஸ் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, இரண்டு சிரேஷ்ட மாணவர் தலைவர்கள் உள்ளிட்ட 23 மாணவ தலைவர்களுக்கு, இதன்போது சின்னங்கள் அணிவிக்கப்பட்டன.
சிரேஷ்ட மாணவர் தலைவர் எம்.எச்.நிஹ்லான் தலைமையில் அனைத்து மாணவர் தலைவர்களும் உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.
மேலும், மாணவ தலைவர்களின் பொறுப்புக்கள், கடமைகள் தொடர்பிலும் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள், கல்வி மற்றும் கல்விசாரா நடவடிக்கைகளின் போது மாணவர்கள் நடந்துகொள்ளவேண்டிய ஒழுக்க விழுமியங்கள் தொடர்பிலும் விழாவின் பிரதம அதிதி உடப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜகத் சேனாரத்ன விஷேட உரை நிகழ்த்தினார்.
இதேவேளை, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கல்வி பற்றிய உளவள ஆலோசனைக் கருத்ரங்கு ஒன்றும் இன்றைய தினம் இடம்பெற்றது. உளவள ஆலோசகர் பஸ்லால் ஏ காதர் வளவாளராக கலந்துகொண்டார்.







