புத்தளம் ஸெய்னப் ஆரம்ப பாடசாலைக்கு ஒருதொகை மின் விளக்கு தொகுதிகளை கொள்வனவு செய்ய தேவையான நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் முஹம்மது ஹிஸாமின் நண்பர் முகம்மது ரஸ்மி (லண்டன்) இதற்காக 50 ஆயிரம் ரூபா நிதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
குறித்த பணம் பாடசாலை அதிபர் முஹம்மது முஸம்மிலிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
