கொழும்பு 28
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன் முட்டை இறக்குமதியை ஆரம்பிக்கவுள்ளதாக என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த பம்பலப்பிட்டியில் பிரதான முட்டை விநியோகஸ்தர் ஒருவருக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
மேலும், தெஹிவளை பகுதியில் உள்ள கடையொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கல்கிசை நீதவான் உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (sm)
