கைத்துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்...!

 

சாஹிப்

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி ஒன்று தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த குறித்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிளை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில் வைக்கச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post