எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் மக்கள் சந்திப்பும் இன்று வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அகில மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




