மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் 5 ஆவது பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) கடந்த செவ்வாய் கிழமை (21) நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் (Rector) கலாநிதி M.Z.M Mufeer (இஸ்லாஹி) PhD மற்றும் ஷெய்குல் இஸ்லாஹிய்யா உஸ்தாத் M.U.M. றம்ஸி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் விஷேட அதிதியாக முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் தினைக்களத்தின் பணிப்பாளர் Z.A.M. பைஸல் (SLAS) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சுமார் 250 இற்கும் மேற்பட்ட டிப்ளோமா (Diploma) மற்றும் லைசன்சிஏட் (Licentiate) பட்டதாரிகள் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டனர்.
அத்துடன் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுமாணி (MA) பட்டம் பெற்ற இஸ்லாஹிகள் மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களில் முதல் நிலை மாணவர்கள் (First class) ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
மேலும் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு உடலாலும், பணத்தாலும், அறிவாலும் சேவை செய்தவர்கள் நன்றியுடன் நினைவு கூறப்பட்டனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் அஷ்ஷேக் அப்துல்லாஹ் அஸாம் இஸ்லாஹி பற்றிய விசேட நிகழ்வொன்றும் நடைபெற்றது.








