எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த வெள்ளிக்கிழமை (24) மாஞ்சோலையில் இடம்பெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வு நடைபெற்று முடிந்தபின், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனை முல்லைத்தீவிலுள்ள மக்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மக்கள் காங்கிரஸ் தலைவருக்காக தாம் எப்போதும் பிரார்த்தனை செய்வதாகவும் அந்த மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நிகழ்வுக்கு வருகை தந்த பல வயோதிப பெண்கள் ரிஷாத் எம்.பியை ஆரத் தழுவி நலன் விசாரித்து, கண்ணீர் விட்டழுததையும் காண முடிந்ததாக அக்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.







