அரசியல்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அரசியல் - அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத்

புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் அவர்களை, தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர வேட்பாளர்களும் செயற்பாட்டாளரும் சந்தித்து வாழ்த்துக்களுடன் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டோம்.

இச் சந்திப்பின்போது, சமூகம் - அரசியல் - தேசநலன் - இன ஒற்றுமை போன்ற பல்வேறு விடயங்களை எமது கவனத்துக்குக் கொண்டுவந்த ஆலிம் அவர்கள்,

“அரசியல்தான் வாழ்க்கை; வாழ்க்கைதான் அரசியல். நான் கூறும் அரசியல் உண்மையான தூய்மையான அரசியல். ஏனெனில் ஏமாற்று அரசியல் வாழ்க்கையல்ல; ஏமாற்று வாழ்க்கை அரசியலும் அல்ல.

அரசியல் என்ற மக்களுக்கு சேவையை ஆற்றும் துறை, இன்று சுயநலம் - பொறாமை - ஆதிக்க வெறி - அளவுமீறிய உலக ஆசை போன்றவற்றினால் பாழ்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மக்களும் பின்தள்ளப்பட்டுள்ளனர்" என்றும் கூறினார்.

இச்சந்தர்ப்பத்தில் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நிரந்தர வதிவிடம் அமைந்துள்ள வட்டாரம் 07 இன் தே.ம.ச. வேட்பாளர் தோழர் ரியாஸ் உடன் வேட்பாளர்களான அஸார்தீன் மற்றும் நப்லான் ஆகியோரும் புத்தளம் தே.ம.ச. செயற்பாட்டாளரும் இணைந்திருந்தனர்.

புத்தளம் மாவட்ட சர்வ மத குழு District Inter-Religious Committee - Puttalam (DIRC) யின் இணைத் தலைவராகவும் கடமையாற்றும் ஆலிம் அவர்கள் தேசிய மற்றும் சர்வதேசிய அனுபவங்களுடன் முக்கியமான சில விடயங்களை முன்வைத்தார்கள், 

     ▪️  சரியானதொரு அரசியல் சமூக மாற்றத்தை சந்தர்ப்பவாத அரசியல் ஏற்படுத்தித் தராது. இலட்சியமும் கொள்கைப் பிடிப்பும்கொண்ட ஒரு குழு; ஒரு கட்சியினால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

     ▪️  பல்வேறு கட்சிகளுக்கு மத்தியில், ஒப்பீட்டு ரீதியாக, தேசிய மக்கள் சக்தி நல்ல பாதையைத் தெரிவுசெய்திருக்கு. நீங்கள், மாஷா அல்லாஹ், இலட்சியவாத கொள்கைவாத அரசியலை தெரிவுசெய்திருக்குறீங்க.

     ▪️  உங்கள் முயற்சிக்குரிய பெறுபேறு உடனே கிடைக்காவிட்டாலும் நாளைய சந்ததிகளுக்குக் கிடைக்கும் என்ற சிந்தனையும்; மறுமை நாளில் அல்லாஹ் கூலியைத் தருவான் என்ற அழகான ஈமானிய்யத்தும் (இறை விசுவாசம்) முஸ்லிம்களுக்கு இருக்கு.

எனவே நீங்கள் சோர்வடையாமல்; பின்னடையாமல் இந்த சிந்தனையை உங்கள் அரசியலின் வழிகாட்டிக் கருவியாக (திசைக்காட்டி) கையிலெடுத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லுங்கள்” என வாழ்த்தினார்.

அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நன்றிகளை தெரிவித்தோம்.

📝

ஹிஷாம் ஹூஸைன்

நிர்வாக்க் குழு உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி 

புத்தளம் மாவட்டம்

Post a Comment

Previous Post Next Post