புத்தளம் நிருபர்
புத்தளம் தள வைத்தியசாலைக்கு நோயாளிகளின் பாவனைக்காக இரண்டு படுக்கை தள்ளுவண்டி (Bed Trollies) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
புத்தளம் Naviguys அமைப்பின் ஏற்பாட்டில் சவூதி அரேபியாவில் தொழில் புரியும் நலன்விரும்பி ஒருவரின் நிதி உதவியில் மேற்படி 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு படுக்கை தள்ளுவண்டிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
மேற்படி, இரண்டு படுக்கை தள்ளுவண்டிகளும் புத்தளம் தள வைத்தியசாலையில் பணிபுரியும் முஹம்மது ஹக்கீமின் உதவியுடன் வைத்தியசாலை நிர்வாகத்திடம் Naviguys அமைப்பினரால் இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


