சாஹிப்
புத்தளம் - நுரைச்சோலை மஸ்ஜிதுல் ஹுதா ( கொலனி) பள்ளிவாசலுக்கு ஒருதொகுதி LED மின் குமிழ்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
சமூக செயற்பட்டாளர் இம்தியாஸின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை மற்றும் மலேசிய நட்பு நிதியினால் மேற்படி மின்குமிழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த LED மின்குமிழ்களை உத்தியோகப்பூர்வமாக வழங்கும் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக தலைவர் முஹம்மது இல்ஹாம், செயலாளர் எம். முஸம்மில், மௌலவிகளான முஹம்மது பாஹிம், எம். அஸ்லம், முஹம்மது பளீள் மற்றும் முஹம்மது ஹம்தான் உட்பட சமூக சேவையாளரும், YMMA பேரவையின் புத்தளம் மாவட்ட பணிப்பாளருமான முஜாஹித் நிசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


