லதீப் மாவத்தை சிறுவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு



இலங்கையின் 75வது சுதந்திர தின்தை முன்னிட்டு முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மங்கள எளிய சமுர்த்தி வங்கியின் கீழ் உள்ள கணமூலை - லதீப் மாவத்தை சிறுவர் சங்கம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) கணமூலை நூலகத்தில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

கணமூலை - லதீப் மாவத்தை சிறுவர் சங்க பொறுப்பாளர் ஆர்.ரலீபா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.சேகு அலாவுதீன், தொழிலதிபரும், சமூக சேவையாளருமான அஸ்ரின் அலாவுதீன், கணமூலை தெற்கு கிராம உத்தியோகத்தர் பாத்திமா அமீனா, அபிவிருத்தி உத்தியோகத்தர் அனூசியா, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மது மக்கீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ரஸீன் ரஸ்மின் உட்பட சமுர்த்தி சங்க உறுப்பினர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், லதீப் மாவத்தை சிறுவர் சங்கத்தைச் சேர்ந்த 

சிறுவர்களின் நடனம், பாடல், கவிதை மற்றும் பேச்சு உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

அத்துடன், சிறுவர் சங்கத்திலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் இதன்போது கற்றல் உபகரணங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டன.

மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, லதீப் மாவத்தை நூலக வளாகத்தில் மரக் கன்று ஒன்றும் நடப்பட்டதுடன், கணமூலை சமுர்த்தி சங்கத்தின் ஏற்பாட்டில் கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் சிரமதானமும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

- சாஹிப் அஹ்மட் -


(கணமூலை சமுர்த்தி சங்கத்தினால் ஏற்பாடு செய்த சிரமதானம்....)

Post a Comment

Previous Post Next Post