எதிர்க் கட்சித் தலைவர் நாளை புத்தளம் விஜயம்


சாஹிப், ரிபாக்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாளை திங்கட்கிழமை (13) புத்தளத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

புத்தளம் - கொழும்பு முகத்திடலில் நாளை மாலை 4 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் அமைப்பாளர் ஹெக்டர் அப்புஹாமியின் அழைப்பின் பெயரில்  எதிர்க் கட்சித் தலைவர் புத்தளத்திற்கு வருகை தரவுள்ளார்.

"தீர்வு அற்ற நாட்டுக்கு தீர்வு"  எனும் தலைப்பில் நாளைய தினம் புத்தளத்தில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பின் போது எதிர்க் கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post