உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த எலி..!

பேட் (Pat) எனும் 'ஆக வயதான எலி' ஒன்று கின்னஸ் உலக சாதனைப் (Guinness World Record) பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

கடந்த புதன்கிழமை (8) அதற்கு அந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டதாக BBC செய்தி தெரிவித்துள்ளது.

"பேட்" எனும் எலியின் வயது 9 ஆகும். இன்னும் சில மாதங்களில் 10ஆகிவிடும் என சொல்லப்படுகிறது.

Star Trek பிரபலம் சர் பேட்ரிக் ஸ்டூவர்ட்டின் (Sir Patrick Stewart) பெயர் அதற்குக் கொடுக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

2013ஆம் ஆண்டு் ஜூலை 14ஆம் தேதி அமெரிக்காவின் சான் டியேகோ (San Diego) நகரில் பிறந்த பேட் Pacific pocket mouse எனும் இனத்தைச் சேர்ந்தது. 

Pacific pocket mouse வட அமெரிக்காவின் ஆகச் சிறிய எலி இனமாகக் கருதப்படுகிறது. 

இதேவேளை, போர்ச்சுக்ஸ் நாட்டைச் சேர்ந்த நாய் ஒன்று 30 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதுள்ளமை கடந்த வாரம் இணையத்தில் வைரலாகி வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது. ( நன்றி M News)

Post a Comment

Previous Post Next Post