பாகிஸ்தான் 05,
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ஜெனரல் (ஓய்வு) பர்வேஸ் முஷாரப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
டுபாயில் அமெரிக்க தனியர் மருத்துவமனையில் சிகிச்சை கெற்றுவந்த நிலையில் தனது 79 ஆவது வயதில் அவர் காலமானார் என ஜியோ நியூஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி முஷாரபின் மரணத்தை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
