இந்திய அரசாங்கத்தினால் அனபளிப்பாக வழங்கப்பட்ட 50 பஸ்களை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பக்லே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்டுள்ள இந்த பஸ்கள், நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு இந்த பஸ்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


