புத்தளம் 22
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு நேற்று நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புத்தளம் மாவட்டத்தில் 12 உள்ளுராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் தினமான நேற்று சனிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலக வளாகம் மற்றும் நகரம் முழுவதும் கடும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையின்றி வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகை தந்த கட்சிகள் , சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
இதேவேளை, புத்தளம் பஸ் நிலையம், புத்தளம் - கொழும்பு முகத்திடல் உள்ளிட்ட இடங்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் கூடி நின்றதுடன், வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து, பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















