புத்தளம் 21
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு இன்று நண்பகல் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், புத்தளம் மாவட்டத்தின் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைக்காக எக்சத் சம சந்தான எனும் கட்சி தாக்கல் செய்த வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்ட போதிலும், 15 நிமிடங்களின் பின்னர் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டதில் ஏற்பட்ட குறைபாடு காணப்படுவதால் அந்த வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு பிரதான அலுவலகத்திடம் புத்தளம் மாவட்ட செயலாளரினால் ஆலோசனை கேட்கப்பட்டது.
இதற்கு பிரதான அலுவலகத்தினால் முதலில் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், சில நிமிடங்களின் பின்னர், அதனை ஏற்றுக்கொள்வதாக பிரதான அலுவலகத்திலிருந்து மீண்டும் அறிவித்துள்ளதாக புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்தார்.
- புத்தளம் நிருபர் -
