நாளை வைத்தியசாலை கனிஷ்ட ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு..!

கொழும்பு 22

நாளை (23) நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய சுகாதார ஊழியர் சபையின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'நாளை, கனிஷ்ட வைத்தியசாலை ஊழியர்களாகிய நாங்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவுள்ளோம். 

நாங்கள் வேலையில் இருந்து விடுபட்டு, நாடு முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடாத்த எண்ணியுள்ளோம். நாங்கள் வேலையின்றி இருந்தாலும், அத்தியாவசிய பணிகள் நிமித்தம் வைத்தியசாலைகளில் பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post