ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று (19) இடம் பெற்றது.
இந்த சந்திப்பில் மு.காவின் செயலாளர் நிசாம் காரியப்பர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் உயர் மட்டக் குழுவினரும் இதில் பங்குபற்றினர்.
