நுவரெலியா 20
நுவரெலியா மாவட்டம், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இன்று விபத்துள்ளானது.
இதில் வானில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.





