ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது


நீர்கொழும்பு பகுதியில் ஹெரோயின் போதைப் பெருளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்படி,  நீர்கொழும்பு  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 5 கிராம் 820 மில்லி கிராம் ஹெராயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு, வெல்லவீதிய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றப்பிரிவுக்கு கிடைத்த மற்றுமொரு இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீர்கொழும்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடமிருந்து 7 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

களனி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் பொலிஸ் குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post