எரிசக்த்தி அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு; குழப்பத்தில் இ.பெ.த தாங்கி உரிமையாளர்கள்

இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் சேவையிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.

தமது கொடுப்பனவுகளை அதிகரிக்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

எங்கள் போக்குவரத்துக் கட்டணங்களுக்கான விலைச்சூத்திரம் எங்களிடம் உள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்புடன் அதனை புதுப்பிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் இறுதிக் கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. அதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிக்கு வராத உரிமதாரர்களின் உரிமத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் எரிபொருள் போக்குவரத்துக்கான அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளாத அல்லது பெற்றுக் கொள்ள முடியாமல் போன புதிய விநியோகத்தர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

போதியளவு ஒட்டோ டீசல், சுப்பர் டீசல், பெற்றோல் 92 மற்றும் மண்ணெண்ணெய் சந்தைக்கு தொடர்ந்தும் விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post