புத்தளத்தில் களைகட்டும் பெருநாள் வியாபாரம்


ஈதுல் பித்ர் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் பெருநாள் வியாபாரங்கள் களை கட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

புத்தளம், மதுரங்குளி மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் வியாபாரம் களைகட்டியுள்ள நிலையில் முஸ்லிம்கள் மிகவும் ஆர்வத்துடன் நகர வர்த்தக நிலையங்களுக்குச் சென்று புத்தாடைகள் மற்றும் பெருநாளைக்குத் தேவையான சிற்றூண்டிகள் , பொருடகள் என்பனவற்றை கொள்வனவு செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

இதேவேளை, புத்தளம் நகரில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் விஷேட பொருநாள் சந்தை ஒன்றும் நடத்தப்பட்டு வருவதுடன், பெரும் எண்ணிக்கையிலான வர்த்தக நிலையங்களும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த இரவு நேர விஷேட பெருநாள் சந்தையில் பகல் நேரங்களை விட இரவு வேளையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கற்பிட்டி, மதுரங்குளி, பாலாவி, நுரைச்சோலை, கரைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மூவின மக்கள் அதிகளவிளானோர் வருகை தருகின்றனர்.

அத்துடன், புத்தளம் நகரிலுள்ள புடவைக் கடைகளிலும் என் றும் இல்லாதவாறு இம்முறை அதிகளவிலான மக்கள் புத்தாடைகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

தற்போது கடும் உஷ்ன நிலையுடன் கூடிய கால நிலை காணப்பட்டாலும் வியாபாரம் சுமுகமான முறையில் இடம்பெறுவதாக புத்தளம், கற்பிட்டி மற்றும் மதுரங்குளி பகுதியிலுள்ள வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

- முஹம்மட் ரிபாக், சாஹிப் அஹ்மட் -













Post a Comment

Previous Post Next Post