நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வைரஸ் நோய் தாக்கம் உள்ளிட்ட பிடியில் இருந்து நாடு விடுபட்டு அனைத்து மக்களும் நிம்மதியுடன் வாழ வேண்டு என புத்தளம் மாவட்டத்தில் உள்ள உடப்பு பிரதேசத்தில் சித்திரை செவ்வாய் முழக் கொட்டு எனும் கிராமிய மர விழா வெகு விமர்சையாக இடம் பெற்றது.
இந்த நிகழ்வு உடப்பு ஸ்ரீ திளெபதியம்மன் ஆலய முற்றவெளியிலும், வீட்டு வளவுகளிலும் ஏனைய ஆலய முற்றவெளிகளிலும், சித்திரை செவ்வாய் முழக் கொட்டு எனவும் கும்மியடி கிராமிய மரபு விழா இடம் பெற்றது.
பின்னர் ஆலய முற்ற வெளிகள் மற்றும் வீட்டு வளவுகளில் அமைக்கப்பட்டிருந்த விஷேட உற்வச நிலையங்களில் விஷேட பூஜைகள் இடம்பெற்றுடன், அதனைத் தொடர்ந்து முளைப்பாரிகள் சகிதம் பிரதான கும்பங்களுடன் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் முன்னால் ஒன்று கூடிய பக்தர்கள் முழக்கொட்டு என்னும் கும்மியடித்து ஆலயத்தில் வழிபட்டனர்.
பின்னர் அடியார்கள் ஒன்று இணைந்து இந்து சமுத்திரம் அமைந்துள்ள முகத்ததுவாரம் பகுதிக்குச் சென்று அங்கும் மீண்டும் ஒன்று கூடிய அடியார்கள் முழக் கொட்டு என்னும் கும்மியடித்த பின்னர் முளைப்பாரிகள் சகிதம் பிரதான கும்பங்களுடன் கடலில் நீராடி தமது நேரத்தி கடனை செலுத்தினார்கள்.
இதன் போது பாலிகை பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நீராடி தமது நேரத்திக் கடனை செலுத்தியதுடன், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வைரஸ் நோய் தாக்கம் உள்ளிட்ட பிடியில் இருந்து நாடு விடுபட்டு அனைத்து மக்களும் நிம்மதியுடன் வாழ வேண்டு எனவும் வேண்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.