புத்தளம் மாவட்டத்தில் தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி படகுகள் மற்றும் தெப்பங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (13) புத்தளம் மாவட்ட கடற்றொழில் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்தநிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஜீத் கிஹான், எம்.ஜே.முஹம்மது பைசல் மற்றும் புத்தளம் மாநகர சபையின் முதல்வர் ரின்ஷாட் அஹ்மட் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினரும் , புத்தளம் தொகுதி கடற்தொழில் பொறுப்பாளருமான சன்ஜீவ பெர்னான்டோ , புத்தளம் மாவட்ட மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளர் அசங்க தென்னகோன், புத்தளம் மாநகர சபை உறுப்பினர் சஹ்ரான், வண்ணாதவில்லு பிரதேச சபை உறுப்பினர் உஜித, இலந்தயடி கிராமிய மீனவர் சங்க தலைவர் டபிள்யூ.ஜி. வாஷிங்டன் பெர்னாண்டோ மற்றும் தித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மீனவர்களும் கலந்து கொண்டனர்.









