ஏழைக்கும் ஒரு வீடு சொந்தமாகும் காலம் வந்துவிட்டது - பைசல் எம்.பி.

 

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தலுவ கிராம அலுவலர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 12.09.2026 சனிக்கிழமை இடம்பெற்றது.

சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு புதிய வீடுகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் வீடமைப்பு கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தத் திட்டம் பொருளாதாரக் கஷ்டங்கள் காரணமாக வீடுகளைக் கட்ட முடியாத குடும்பங்களுக்கு நிரந்தரமான தீர்வைக் கொடுப்பதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த முதலீடாகவும் காணப்படும்.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான சகோதரர் பைசல் அவர்களின் தலைமையில் கல்பிட்டி பிரதேச சபையின் தலுவ வட்டார உறுப்பினரும் பிரஜா சக்தி CDC தலைவருமான சகோதரர் நிஷாந்த மற்றும் அரச உத்தியோகத்தர்களும் இத்திட்டத்தின் பயனாளிகள் மேலும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.



Post a Comment

Previous Post Next Post