ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பிரதேச செயலகத்திற்குற்பட்ட ரத்மல்யாய, முள்ளிபுரம் மற்றும் வேப்பமடு ஆகிய கிராமங்களில் உள்ள வீதிகளுக்கு இலவச மின்சார விநியோகம் செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த கிராம மக்களின் நீண்டகாலத் தேவைநாக காணப்பட்டு வந்த வீதிகளுக்கான மின்சார தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கிலும், குறித்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கிலும் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் பரிந்துரையின் கீழ், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம். கியாஸ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்தீபன் ஆகியோரது அயராத முயற்சியினாலும் குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ரத்மல்யாய புஞ்சி கம்மான, அடப்பனா வில்லு, முள்ளிபுரம் மற்றும் வேப்பமடு ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளுக்கு இலவச மின்சார இணைப்புக்களுக்கான செலவு மதிப்பீடு செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தின் மூலம் குறித்த பிரதேச வீதிகளுக்கு ஒளியூட்டப்பட்டு, பொதுமக்களின் இரவுநேரப் போக்குவரத்து பாதுகாப்பானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


