ஜூட் சமந்த
புத்தளம் - லுணுவில கயிறு தொழிற்சாலையில் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வென்னப்புவ உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசேல புல்வன்ச தெரித்துள்ளார்.
லுணுவில பொலிஸாரும் , தொழிற்சாலை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், தொழிற்சாலை முழுவதும் பரவிய தீயை கட்டுப்படுத்த சிலாபம் நகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் வரவழைக்கப்பட்டனர்.
இந்த தீ விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதம் பற்றியும் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் தேங்காய் நார் பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
