சாஹிப்
கரம்பை - உடப்பு பிரதான வீதி கடந்த சில நாட்களாக ஏற்பட்ட தொடர்ச்சியான பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், உடனடி சீரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில், பொதுஜன ஐக்கிய முன்னணியின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரினோஸ் அவர்கள், PRDA அதிகாரிகளை அவசரமாக தொடர்பு கொண்டு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை(05.12.2025) PRDA தொழில்நுட்ப அதிகாரி சம்பந்தப்பட்ட வீதியின் மிக சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிலைமைகளை ஆய்வு செய்தார்.
இதன் போது, பிரதேச சபை உறுப்பினர் ரினோஸ் அவர்களின் கோரிக்கைக்கு இணங்க, மிக விரைவில் இந்த பிரதான வீதி மற்றும் சேதமடைந்த போக்குகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

