பித்ர் கடனை நிறைவேற்றிய தந்தையை இழந்த பிள்ளைகள்!


எம்.ஏ.ஏ.காசிம்

ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை இழந்த பிள்ளைகள் பித்ர் கடன் என்னும் தர்ப்பணத்தை இன்று (24) நிறைவேற்றினார்கள்

சிலாபம் தெதுறு ஓயா (மாயவன்) ஆற்றங்கரையில் இன்று காலை 7.00 மணி முதல் சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரம் ஆலய குரு சிவஸ்ரீ முரளிதரக் குருக்கள் தலைமையில் நடை பெற்றது.

இதன் போது புத்தளம் மாவட்டத்தின் பல பாகங்களிலும் தந்தையை இழந்த நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இதன் போது  பித்ர் கடன் என்னும் தர்ப்பணத்தை நிறைவேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post