மருந்து விநியோக செயல்முறையை முறைப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் இடையே இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் விநியோக பொறிமுறையில் எழுந்துள்ள சிக்கல் நிலைமைகள் மற்றும் பலவீனங்கள் குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டது, மேலும் பற்றாக்குறை மற்றும் தாமதங்கள் இல்லாமல் மக்களுக்கு தேவையான மருந்துகளை தொடர்ந்து வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் நாட்டில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள் ளுமாறும், அதற்கான தேவையான திட்டங்களை துரிதமாக தயாரிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.