முந்தல் விபத்தில் ஒருவர் காயம்!


எம்.ஏ.ஏ.காசிம்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்கள எளிய நவண்டான்குளம் பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் அதிசொகுசு பஸ்ஸொன்று மங்கள எளிய நவண்டான்குளம் பிரதேசத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, உள்வீதியில் இருந்து பிரதான வீதிக்கு இருவருடன் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று குறித்த சொகுசு பஸஸூடன்; மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதுடன், பின்னர் பஸ் அருகில் இருந்த பாரிய மரத்துடனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் முந்தல் - நவண்டான்குளம  பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்த மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு பஸ் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post