நாளையும் வாட்டி வதைக்கப்போகும் வெப்பம்!

அதிகரித்த வெப்பநிலையானது நாட்டின் பல பகுதிகளில் நாளை (13)  கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்று (12) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அந்தவகையில் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை (13) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, 'எச்சரிக்கை' மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post