எம்.ஏ.ஏ.காசிம்
உலக வாழ் பௌத்த மக்கள் இன்று திங்கட்கிழமை (12..05.2025) வெசாக் பூரணை தினத்தை கொண்டாடினர்.
அந்த வகையில் மதுரங்குளியில் உள்ள ஸ்ரீ சரணங்கர ராம விகாரையில் இன்று காலை முதல் வர்ண பூஜை மற்றும் சயம நிகழ்வுகள் வெசாக் கூடு அலங்கரித்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
அத்துடன் அநுராதபுரம் புனித பூமிக்கு செல்லும் பக்தர்களுக்கு மதுரங்குளி பொலிஸாரின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் கடலை அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடை பெற்றது.
இதன் போது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் உ்ளளிட்ட பலரும் இதன் போது கலந்து கொண்டு பக்தர்களுக்கு கடலை அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பகல் உணவு அன்னதானமும் மதுரங்குளி நகரில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் இப் பிரதேசங்களில் வெசாக் கூடுகள் வெசாக் வெளிச்சக்கூடுகள் தயார் செய்யும் நிகழ்வும் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.