மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று..!

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, எரிபொருள் விலை திருத்தம் இன்று(31) இடம்பெறவுள்ளது.

இறுதியாக மே மாதத்திற்கான விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில்  ஜூன் மாதத்திற்குரிய எரிபொருள் விலை திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.

மேலும் WTI கச்சா எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை $60.79 ஆகவும், பிரெண்ட் கச்சா எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை $62.78 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post