கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை சஜித் தரப்பு கைப்பற்றவே முடியாது!

சஜித் அணியினர் எந்த வழியாலும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் ஆட்சி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றினால் நாட்டின் முழு அதிகாரமும் தங்கள் வசம் வரும் என்ற எண்ணத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுகின்றது. 

அவர்களின் இந்தச் சிறுபிள்ளைத்தன விளையாட்டைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகின்றது.

கொழும்பு மாநகர சபையில் அதிக ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தியே ஆட்சி அமைக்கும்.அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பல சுயேச்சைக் குழுக்களின் உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளன.

மேயர் தெரிவின்போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி வாகை சூடுவார். 

சஜித் அணியினர் எந்த வழியாலும் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post