சப்ராஸ்
கற்பிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ராக வாகனமும் பின்னால் சென்ற கூலரும் மோதி விபத்து ஒன்று இன்று பிற்பகல் கற்பிட்டி, ஆண்டாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாகன சாரதிகள் இருவருக்கும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
