குருநாகலில் புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

உணவு மற்றும் போசணையை கட்டியெழுப்பும் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (15) குருநாகல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதமர் தினேஷ் குணர்வத்தன,  வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத்,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, யூகே சுமித் உடுகும்புற மற்றும் மாகாண பிரதம செயலாளர் தீபிகா கே குணரத்தின, குருநாகல் மாவட்ட அரசாங்க அதிபர் ரத்நாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, குருநாகல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கான இலத்திரனியல் கோழிக் குஞ்சு பொறிக்கும் இயந்திரங்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன பிரதமரால் வழங்கிவைக்கப்பட்டன.



Post a Comment

Previous Post Next Post