மதுரங்குளி நிருபர்
மதுரங்குளி - கணமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் நாளை மறுதினம் 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் முஸ்லிம் ஹேன்ஸ் (Muslim Hands) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.எம். மிஹ்ழார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த கட்டிடத்தை திறந்துவைப்பார்.
இந்த நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முகம்மது அப்துல்லா அஹ்மத் பாரிஸ் மற்றும் அஷ்ஷெய்க் இஸட்.பீ.எம். அப்துல் ரஹ்மான் உட்பட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை தலைவர் உட்பட கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
