முல்லைத்தீவு - தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்

Smart தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 139 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 03 இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த ஸ்மார்ட் வகுப்பறையை மாணவர்களிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில்,   கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்கு எதிர்க் கட்சித் தலைவர், ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.



Post a Comment

Previous Post Next Post