முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியை பிறப்படமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நீண்டகாலமாக கரிக்கட்டையில் வசித்துவந்து தற்போது கொத்தான்தீவு ரஹ்மத்புரத்தில் வசித்து வந்தவருமான ஆயிஷா பீவி அவர்கள் இன்று (13) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் காலம் சென்ற கப்பமரிக்கார் மற்றும் பாத்தும்மா உம்மா ஆகியோரின் அன்பு மகளும் அஸீஸ் மனேஜர் அவர்களின் அன்பு மனைவியும் அனஸ்தீன் (சவூதி அரேபியா) ஜெம்ஸித் (ஆசிரியரும் அல் ஹஸனாத் பத்திரிகை ஆசிரியரும்), நிஹார் (CTB Driver), நிம்ஸாத் (சட்டத்தரனி) நிஹ்மத் (ஆசிரியர்), ஜரீஸா (முஅல்லிமா), சாமிலா ஆகியோரின் அன்புத்தாயாரும் மர்ஹூம் மஹ்றூப் ஆசிரியர், அனீஸ், முஜாஹிதா, மின்ஹா, ஹுஸ்னா (தினக்குரல் பத்திரிகை உதவி ஆசிரியர்), நிஹ்லா (ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமியாரும் தமீம் (M.L.T), ரஹீத் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் (13) இன்று மாலை 5 மணி அளவில் கொத்தான்தீவு ரஹ்மத்புரம் முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் - மருமகன்
முஹம்மது அனீஸ் - முல்லை ஸ்கீம்